தாம்பரம் மாநகர காவல் ஆணையர் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடங்கள் விபத்தில்லாமல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 3000 காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.
வருகின்ற 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழா முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி 31.12.2024 முதல் 01.01.2025 வரை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை மற்றும் வழிப்பாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் மற்றும் பள்ளிக்கரனை காவல் மாவட்டங்களில் முக்கிய இடங்களான தாம்பரம் பேருந்து நிலையம், இரயில் நிலையம், மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மற்றும் ஓ.எம்.ஆர், ஈ.சி,ஆர், மற்றும் ஜி.எஸ்.டி சாலைப்போன்ற முக்கிய சாலைகளில் வாகன நெரிசல்களை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க 37 கூடுதலான காவல் வாகனத் திணக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு பொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் கடல்நீரில் இறங்கவோ, குளிக்கவோ முடியாதவாரு தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பணையூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும் முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் முலம் கண்காணித்தும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மேலும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு போலீஸாருடன் இணைந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவும், வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் நெருக்கமாக கூடுமிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெடிகள் வெடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலி பெருக்கிகள் வைக்க உரிய அனுமதி காவல் துறையிடமோ அல்லது உரிய துரையிடமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
FL2 மற்றும் FL3 மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மூடப்படும், மீறுவோர்மீது கட்டாயமாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுதல், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற செயல்களை தடுப்பதற்கு சாலை பாதுகாப்பு வரையறைகள் கடுமையாகப் பினபற்றப்படும் 61601 தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒதுக்குப்புறமான அல்லது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.