தமிழ்நாடு

Gold rate: என்னதான் நடக்குது..? தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

Gold rate: என்னதான் நடக்குது..? தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு
தங்கம் விலை குறைவு
சமீப காலமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ரூ.75,000 எட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைப்பிரியர்கள் என்னதான் நடக்கிறது? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நின்றனர். இனி தங்கம் வாங்கவே முடியாதா? என்று புலம்பி தீர்த்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களை மன ஆறுதல் படுத்தியுள்ளது.

அதன்படி, நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 275 குறைந்து ரூ. 9,015-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.2,200 குறைந்து ரூ. 72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.111-க்கும் ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை குறைவு

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.9,005-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துள்ளதால் நாளை (ஏப்.25) இதற்கு நிகராக தங்கம் விலை அதிகரிக்கக் கூடும் என்று பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.