தமிழ்நாடு

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!
குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலில், பெண் பக்தர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட கோயில் மேற்பார்வையாளர் சுரேஷ் என்பவர், இந்தச் சம்பவம் தொடர்பான ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான செய்தி குமுதம் வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ விவரப்படி, சுமார் 1300 ஆண்டுகள் பழமையான திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர் சுரேஷ். இவர், பட்டப்பகலில் தரிசனத்திற்கு வந்த ஒரு பெண் பக்தருடன் கோயில் நந்தவனத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார் தொடர்பாக ஆரம்பத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது, தனக்கு 53 வயதாவதாகவும், திருமணம் ஆகவில்லை என்றும், இதுபோன்ற எந்தத் தவறும் இதுவரை செய்ததில்லை என்றும் அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் அவரை பணியிட மாற்றம் மட்டும் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்பார்வையாளர் சுரேஷ் பெண் பக்தருடன் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து குமுதம் வார இதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், மேற்பார்வையாளர் சுரேஷை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புகழ்பெற்ற திருக்கோயில் வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.