தமிழ்நாடு

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?.. குணப்படுத்த இயலுமா? - மருத்துவர் சொல்வது என்ன?

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏன் ஏற்படுகிறது?.. குணப்படுத்த இயலுமா? - மருத்துவர் சொல்வது என்ன?
"ஜெனிடிக் காரணமாகவே, ஆண்கள் அதிகமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்"

ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று. இருப்பினும் சமீப காலத்தில் ஆண்கலும் அதிகபடியாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜெனிடிக் காரணமாக அதிகபடியான ஆண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை முறைக்கு முன்னுரிமை அளிக்கவும் ஆரம்ப நிலையிலே நோய் பாதிப்பை கண்டறிவதை ஊக்குவிக்கும் வகையிலும் மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர் மாதமாக அக்டோபர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மார்பக புற்று நோய்க்கான முன்னெச்சரிக்கை பரிசோதனை முறைகள் மற்றும் நோயின் தன்மை குறித்து மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷா ரெட்டி குமதம் செய்திகளுக்கு பிரத்தியேகமாக பேட்டி அழைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் மார்பக புற்றுநோய் ஒரு பொதுவான நோயாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு இந்த நோய் அதிகப்படியாக தாக்கத்தை ஏற்படுத்திகிறது. மார்பக புற்றுநோய் இருப்பதை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

பொதுவாகவே பெண்கள் மார்பக புற்றுநோய்க்காண முன்னெச்சரிக்கை பரிசோதனைகளை பின்பற்ற வேண்டும். அன்றாட உணவு பழக்கம், உடல் எடை, உடல் பருமன், ஆகியவற்றால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. மேலும் இதே அறிகுறிகள்தான் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

அவ்வப்போது பெண்கள் மற்றும் ஆண்கள் மார்பக ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமான ஒன்று. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று. இருப்பினும் சமீப காலத்தில் ஆண்கலும் அதிகபடியாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகிறது.

இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இதனை முழுமையாக சரி செய்ய முடியும். ஜெனிடிக் காரணமாகவே, ஆண்கள் அதிகமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். முறையான சிகிச்சை வழிமுறைகளை பின்பற்றுவது மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து ஆண்கள் குணம் அடையலாம். இந்தியாவில் மாதத்திற்கு 28 பேர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.