திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏப்ரல் 15 முதல் ஜீன் 15 வரை சீசன் காலங்களாகும். இதனையடுத்து வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம், இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் கோடிகணக்கான மலர்கள் பூத்து குலுங்கி மலர் கண்காட்சியுடன்,கோடை விழாவும் துவங்கும்,இந்நிலையில் இந்த வருடம் 62-வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் வரும் சில நாட்களில் துவங்க உள்ளது.
இதனையடுத்து பூங்காவில் பூத்துள்ள மலர்களை தனி தனியே வகைப்படுத்தி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த அலங்கார மலர்கள், கொய் மலர்கள், மற்றும் காய்கறிகள் வைக்கும் அரங்கங்கள், ஸ்டால்கள் அமைக்கும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் மாவட்ட நிர்வாகம் மலர் கண்காட்சி தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பூங்காவில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசிக்க கூடுதலாக 1 மணி நேரம் பூங்காவில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பிரையண்ட் பூங்காவில் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அனுமதி இருந்த நிலையில் இந்த வருடம் 1 மணி நேரம் கூடுதலாக அனுமதிக்கபட்டு உள்ளனர், மேலும் மாலை வேளையில் சுற்றுலாப்பயணிகளை கவர வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.