தமிழ்நாடு

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்
10th public exam result 2025 announced by Minister for School Education anbil mahesh
இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (S.S.L.C) எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் / ஏப்ரல் 2025 மாதங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் எழுதியிருந்தனர்.

முக்கிய புள்ளிவிவரங்கள்:

-->தேர்வு நடைபெற்ற நாட்கள்: 28.03.2025 முதல் 15.04.2025 வரை
-->தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 8,71,239
-->மாணவிகளின் எண்ணிக்கை: 4,35,119
-->மாணவர்களின் எண்ணிக்கை: 4,36,120

தேர்ச்சி விவரங்கள்:இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 93.80% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 8,17,261 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,00,078 (91.74%). இந்த முடிவுகளின்படி, மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட 4.14% அதிகமாக உள்ளது. மேலும், இந்த தேர்வுகளுக்காக வருகை புரியாத மாணாக்கர்களின் எண்ணிக்கை 15,652 ஆகும்.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:

-->சிவகங்கை- 98.31%
-->விருதுநகர்- 97.45%
-->தூத்துக்குடி- 96.76%
-->கன்னியாகுமரி- 96.66%
-->திருச்சி- 96.61%

அரசுப் பள்ளி மாணாக்கர்களில் சிறப்பான தேர்ச்சியில் முதல் 5 மாவட்டங்கள்:

அரசுப் பள்ளி மாணாக்கர்களும் இந்த தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 அரசுப் பள்ளிகள் அடங்கிய மாவட்டங்கள் முறையே:

-->சிவகங்கை: 97.49%
-->விருதுநகர்: 95.57%
-->கன்னியாகுமரி: 95.47%
-->திருச்சி: 95.42%
-->தூத்துக்குடி: 95.40%

பிற முக்கிய புள்ளிவிவரங்கள்:

-->தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை: 12,290. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 11,409 (92.83%).
-->தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை: 237. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 230 (97.05%).
-->தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் எண்ணிக்கை: 23,769. அவர்களில் தேர்ச்சி பெற்றோர்: 9,616 (40.46%).