India Qualifiers To Hockey in Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.
இந்நிலையில், 4வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான தகுதி சுற்றில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை களமிறங்கியது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தென் கொரியா இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில், 12 சுற்றுகள் முடிவில் 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் கொரிய இணையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு ஒரு ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, மாலை 04.45 மணிக்கு நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில், ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், அயர்லாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் ஃபெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, இந்திய அணி கோல் அடித்தது. தொடர்ந்து போட்டியின் 19 நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்கப்பட்டது. இந்த இரண்டு கோல்களையும், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன் பின் அயர்லாந்து அணியை கோல் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
நியூசிலாந்திற்கு எதிரான அர்ஜென்டினா அணியின் வெற்றிக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது.
இன்றைய போட்டிகள்:
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் 50 மீட்டர் ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங், ஸ்வப்னைல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ராஜேஸ்வரி குமாரி மற்றும் ஷ்ரேயாசி சிங் ஆகியோ பங்கேற்க உள்ளனர்.
மதியம் 12.50 மணிக்கு நடைபெறும் பெண்கள் பேட்மிண்டன் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, எஸ்டோனியாவின் கிரிஸ்டன் கூபாவை எதிர்த்து விளையாடுகிறார்.
மதியம் 01.40 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பேட்மிண்டன் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லஷ்சயா சென், இந்தோனேஷியாவின் கிறிஸ்டி ஜோனாதனை எதிர்த்து விளையாடுகிறார்.
மதியம் 01.24 மணிக்கு நடைபெறவுள்ள தனிநபர் படகுப் போட்டியில், பல்ராஜ் பன்வார் பங்கேற்கிறார்.
மதியம் 01.30 மணிக்கு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா, சிங்கப்பூரின் ஷெங் ஜியனை எதிர்த்து விளையாடுகிறார்.
மாலை 03.34 மணிக்கு நடைபெறவுள்ள 75 கிலோ பெண்கள் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் லாவ்லினா, நார்வேயின் சன்னிவா-வை எதிர்த்து ஆடுகிறார்.
மாலை 03.56 மணிக்கு நடைபெறவுள்ள வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமார், எஸ்டோனியாவின் பர்னத் ரீனா-வை எதிர்த்து விளையாடுகிறார்.
மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ள பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், 16ஆவது சுற்றுப் போட்டியில் மனிகா பத்ரா பங்கேற்கிறார்.
இரவு 07.15 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் ஒற்றையர் வில்வித்தைப் போட்டியில், இந்தியாவின் தருண்தீப் ராய், ஜெர்மனியின் டாம் ஹால் உடன் மோதுகிறார்.
இரவு 11 மணிக்கு நடைபெறும் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எச்.பிரணாய், வியட்நாமின் டுக் பத் லீ உடன் மோதுகிறார்.
india qualifies to the knockouts in hockey at paris olympics 2024
இந்தியா, பாரிஸ் ஒலிம்பிக் 2024, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, பேட்மிண்டன், படகுப்போட்டி, India, Paris Olympics 2024, Shooting, Hockey, Badminton, Rowing, Paris Olympics 2024 Schedule in Tamil