அரசியல்

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்...நல்லதம்பி

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்...நல்லதம்பி
தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி
உயிர் மூச்சு உள்ளவரை..

தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் அளித்த கடிதத்தில், பொறுப்பில் இருந்து விடுக்குமாறு கேட்டேன். விடுவிக்காதபட்சத்தில் நான் ஒதுங்கிக்கொள்வேன் என்றுதான் சொன்னேன். இது ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்டு, நான் கட்சியில் இருந்து விலகுவதாக சொன்னார்கள். ஒரு காலமும் என்னை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியிலேயே தான் தொடர்ந்து பயணிப்பேன். உயிர் மூச்சு உள்ளவரை அவரது கட்சியில் தொண்டனாகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நல்லதம்பி ஆதங்கம்

தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.

முன்னதாக இளைஞரணி செயலாளர் பொறுப்பிற்கு பதிலாக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என நல்லதம்பி எதிர்பார்த்திருந்ததாகவும், அது கிடைக்காதபட்சத்தில் புதிய பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.