சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங் அசுர வளர்ச்சியை தடுக்கவே கொலைக்குத் தூண்டிய முக்கிய காரணம் எனவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நான்கு முக்கியமான முன் விரோதங்களே காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், சம்போ செந்தில் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரம் தொடர்பாக 30 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிக் கொண்டதும்,
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை செய்யப்பட்டதற்கான நான்கு காரணங்களே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட முக்கியமாக அமைந்தது.
முதல் குற்றவாளியான நாகேந்திரன் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இரண்டாவது குற்றவாளி சம்போ செந்தில் பண உதவிக்கு முக்கிய உதவி செய்துள்ளார். மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியுள்ளார் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும்பொழுதும் நட்சத்திர விடுதியில் கூட்டம் கூடி கொலை செய்யத்திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆறு மாதம் திட்டமிட்டு ரெக்கி ஆப்ரேசன் நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்துள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்ச ரூபாய் பணம் மொத்தமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய செலவிடப்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என வேகப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையே கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா
இதுபோன்ற தொடர் விசாரணையிலேயே முதல் மூன்று குற்றவாளிகளான நாகேந்திரன், சம்போ செந்தில் அஸ்வத்தாமன் சிக்கினர். சென்னை காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் 63 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணமும், ரொக்கமாக 80 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.