GOAT OTT Release Date : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட். விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக விஜய் விரைவில் அரசியலுக்கு செல்லவிருப்பதால், சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துவிட்டார். கோட்-ஐ தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். இதுவும் கோட் படத்துக்கு செம ஹைப் கொடுத்திருந்தது.
இதனால் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸான கோட் திரைப்படம், முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வரை வசூலித்து கெத்து காட்டியது. விஜய் கரியரில் லியோவுக்குப் பின்னர் முதல் நாளில் அதிகம் கலெக்ஷன் செய்த படம் என்ற சாதனை படைத்தது கோட். லோகேஷ் – விஜய் கூட்டணியில் வெளியான லியோ முதல் நாளில் 142 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோட் படத்தின் கலெக்ஷன் ஆரம்பத்தில் தாறுமாறாக இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் சரியத் தொடங்கியது.
முக்கியமாக இந்தப் படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்களும் மீம்ஸ்களும் அதிகளவில் வரத் தொடங்கின. மல்டி ஸ்டார்ஸ் மூவி என்பதை தாண்டி கதை, திரைக்கதையில் எந்த மேஜிக்கும் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், கோட் திரைப்படம் இதுவரை மொத்தம் ரூ.250 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல், இந்த வாரம் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன், ஜூனியர் என்டிஆரின் தேவரா படங்கள் ரிலீஸாகியுள்ளன. இதனால் கோட் படத்திற்கு ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டுள்ளது, அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் குறையத் தொடங்கியது. இதனால் கோட் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி இந்தப் படம் அடுத்த மாதம் (அக்) 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அதற்கு முன்பே கோட் படத்தை ஓடிடியில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.