சினிமா

'வழியிறேன்..' மதராஸி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

'வழியிறேன்..' மதராஸி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது!
Madharaasi Second Single
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வரும் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு ஐந்து வருட இடைவெளிக்குப் பின் முருகதாஸ் இயக்கியுள்ள தமிழ்ப் படம் இது என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘மதராஸி’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘டான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாடல்கள் மற்றும் வெளியீட்டு தேதி

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சலம்பல..’ பாடல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி யூடியூபில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. ‘வழியிறேன்..’ என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

‘மதராஸி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வரும் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது, படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படங்கள்

'மதராஸி' படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.