பாலிவுட்டில் கடந்த 2000ஆம் ஆண்டில் அக்ஷய் குமார், சுனில் செட்டி மற்றும் பரேஷ் ராவல், தபு, ஓம் பூரி ஆகியோர் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கிய ‘ஹேரா பெரி’ [Hera Pheri] திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
1989ஆம் ஆண்டு வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ [Ramji Rao Speaking] என்ற மளையாள திரைப்படத்தின் மறு உருவாக்கமான இந்த நகைச்சுவை திரைப்படம் ரூ.7.5 கோடியில் தயாரிக்கப்பட்டு, ரூ.21.4 கோடி வசூலை ஈட்டியது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அக்ஷய் குமார் மற்றும் ராவலின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகியது வரவேற்பை பெற்றது. இதுவரை 3 பாகங்கள் வெளியாகி இருந்தாலும் அந்த மூவர் கூட்டணியானது, மீண்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் மூவரும் இணைய உள்ளனர்.
அக்ஷய் குமார் சர்வதேச கராத்தே தொடரை நடத்தி வருகிறார். இதன் 16ஆவது சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, சுனில் மற்றும் பரேஷ் ஆகியோர் அக்சய் குமருடன் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.