பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் NS இயக்கியுள்ளார். 2 மெகா ஸ்டார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மூன்வாக் - இசை, நடனம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.
விஜய் நடித்த G.O.A.T மற்றும் அஜித் குமார் நடித்த Good Bad Ugly போன்ற திரைப்படங்களை வெற்றிகரமாக ரோமியோ பிக்சர்ஸ் நிறுவத்தினர் வெளியிட்ட நிலையில், 2 திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படம் குறித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில் - "25 ஆண்டுகளுக்குப் பிறகு AR ரஹ்மானும், பிரபுதேவாவும் ஒன்றாக இணையும் மூன்வாக் போன்ற சிறப்பான திரைப்படத்தை வெளியிடுவதில் பெருமையாக உள்ளது. இயக்குநர் மனோஜ் என்.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ்-இன் முதல் திரைப்படமே அதிக பொருட்செலவில், குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது" என்றார்.