சினிமா

ரெட்ரோ: சூர்யா கட் அவுட் பேனருக்கு பீர் அபிஷேகம்..வீடியோ வைரல்

புதுக்கோட்டையில் நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ரெட்ரோ: சூர்யா கட் அவுட் பேனருக்கு பீர் அபிஷேகம்..வீடியோ வைரல்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்களில் இறுதியாக சிங்கம்-2 திரைப்படம் தான் வசூல் அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. சிங்கம்-2 திரைப்படம் வெளியானது 2013 ஆம் ஆண்டு.

அதன்பின் சூர்யாவிற்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படம் தான். ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியானது ஓடிடி தளங்களில் தான். 12 வருடங்களாக பெரிய திரையில் வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவிற்கு ரெட்ரோ திரைப்படம் கம்பேக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் விஜய் திரையரங்கில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படத்தின் முதல் காட்சி காண குவிந்தனர். அதிக அளவில் குவிந்த ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க துள்ளி குதித்து நடனம் ஆடினர். அப்போது திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்தார். இதுத் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது,

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள நிலையில் இப்படத்தினை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.