இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ்(48) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இதய பிரச்னை காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் மனோஜ் அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
Read more: Shihan hussaini: ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த தானம் செய்ததே என் மகன் தான்- எஸ்.வி.சேகர்
நடிகர் மனோஜ் தாஜ்மகால், கடல்பூக்கள், சமுத்திரம், ஈர நிலம், அல்லி அர்ஜுனா, ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். மனோஜுன் திடீர் மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.