தீபாவளிக்கு வெளியான 'Dude' திரைப்படத்தில், தனது பாடல்களைச் சட்ட விரோதமாக உருமாற்றிப் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், அத்திரைப்படத்தில் இருந்து அவரது பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா தொடர்ந்த வழக்கும் கோரிக்கையும்
'Dude' திரைப்படத்தில், தான் இசையமைத்த 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் "கருத்த மச்சான்" பாடலையும், 'பணக்காரன்' திரைப்படத்தின் "100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு" பாடலையும் தனது அனுமதியின்றி உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். தனது அனுமதியின்றிப் பதிப்புரிமைச் சட்டத்தை மீறிப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளதால், இரண்டு பாடல்களையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்
இளையராஜா தரப்பில், அவரது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் உருமாற்றப்பட்டுப் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்றும், பாடலை உருமாற்றி உள்ளதால் அவற்றைப் பயன்படுத்த உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
'Dude' திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியைப் பெற்று இந்தப் பாடல்களைப் படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களை உருமாற்றிப் பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார். இதையடுத்து, 'Dude' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த ஏதுவாகப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீக்க ஒரு வார அவகாசம் வழங்க வேண்டும் என்ற பட நிறுவனத்தின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்துவிட்டார். இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை 2026 ஜனவரி 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

LIVE 24 X 7