சினிமா

’கூலி’ படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.. ஸ்ருதிஹாசன் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்

’கூலி’ திரைப்படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’கூலி’ படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.. ஸ்ருதிஹாசன் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்
ஸ்ருதிஹாசன் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்

'வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாயிர், ஸ்ருதி ஹாசன், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கூலி’ படத்தில் நடிகை பூஜா  ஹெக்டே பாடல் ஒன்றிற்கு சிறப்பு நடனம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ’கூலி’ திரைப்படம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை ஸ்ருதிஹாசன் சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது அவரிடம் ’கூலி’ படப்பிடிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ’கூலி’ படப்பிடிப்பு நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது என்றும் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.  மேலும்  படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் சினிமாவில் புதுமையான பல விஷயங்களை கொண்டு வந்தார். ஒரே இரவில் கதை சொல்வது, மசாலா பாடல்கள் இல்லாமல் படம் இயக்குவது என தனித்துவமாக படத்தை இயக்கி வருகிறார்.‘மாநகரம்’ திரைப்படத்தின் மொத்த கதையும் ஒரே இரவில் நடப்பது போல் காட்டியிருப்பார். அதேபோன்று தான் ‘கைதி’ திரைப்படத்தையும் இயக்கி இருப்பார்.

இவர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அதிலும், கமல்ஹாசன் ரவுடிகளுடன் சண்டைபோடும் காட்சிகளில் அவர் வைத்திருந்த கேமரா ஆங்கிள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜயை முற்றிலும் புதிய சாயலில் காட்டியிருப்பார். இவ்வாறு தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் புதுமையான பல விஷயங்களை லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார்.