1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரில் பிறந்த தாதாசாகேப் பால்கே இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படுகிறார். இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1913 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'ராஜா ஹரிச்சந்திரா' என்ற திரைப்படம் தான் இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ஆகும். இது இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தியது.
தாதாசாகேப் பால்கே தனது 19 வருட திரை வாழ்க்கையில் 95 திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் இயக்கியுள்ளார். புராணக் கதைகளையும், இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதில் அவர் கைத்தேர்ந்தவர். 'மோகினி பஸ்மாசுரா', 'சத்யவான் சாவித்திரி', 'லங்கா தஹன்' போன்ற அவரது படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் விதமாக, இந்திய அரசு 1969 ஆம் ஆண்டு முதல் 'தாதாசாகேப் பால்கே விருது' என்ற உயரிய விருதை வழங்கி வருகிறது. இது இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். தாதாசாகேப் பால்கே 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி காலமானார்.
அமீர்-ராஜ்குமார் ஹிரானி காம்போ:
பாலிவுட்டின் ப்ளாக்பஸ்டர் காம்போகளில் ஒன்றான அமீர் கான்-ராஜ்குமார் ஹிரானி இணை 11- ஆண்டுகளுக்கு பிறகு தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்காக மூன்றாவது முறையாக கைக்கோர்க்க உள்ளனர். ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ், பிகே திரைப்படம் விமர்சன ரீதியாக பல்வேறு பாராட்டுகளை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது நினைவிருக்கலாம்.
எஸ்.எஸ். ராஜமௌலி- ஜூனியர் என்.டி.ஆர்:
பாகுபலி திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தயாரிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நேரத்தில் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இரண்டு தரப்பினர் முயன்று வரும் நிலையில், தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர், எஸ்.எஸ்.ராஜமெளலி குழுவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பயோபிக் குறித்து யாரிடம் பேசினார்கள்?
”ராஜமௌலி குழுவினர், தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக என்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை," என்று புசல்கர் குற்றம்சாட்டியுள்ளார். "யாராவது பால்கே ஜியைப் பற்றி படம் எடுக்கிறார்கள் என்றால், குறைந்தபட்சம் அந்தக் குடும்பத்தினரிடமாவது பேச வேண்டும்," என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அமிர்கான் மற்றும் ஹிரானியை புசல்கர் பாராட்டினார். அதற்கு காரணம் அமிர்கான்-ஹிரானி சார்பாக இந்துகுஷ் பரத்வாஜ் கடந்த மூன்று ஆண்டுகளாக தாதாசாகேப் பால்கேவின் குடும்பத்துடன் தொடர்புக் கொண்டு பால்கே குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அமிர் கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் இந்த பயோபிக் திட்டம் எனக்கும் ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர்களின் குழு எங்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்தது. நான் அவர்களிடம் தெளிவாகச் சொன்னேன்.. நீங்கள் நேர்மையாக வேலை செய்கிறீர்கள், நீங்கள் பயோபிக் வேலையை தொடருங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை." என குறிப்பிட்டுள்ளார் சந்திரசேகர் புசல்கர்.
தாதாசாகேப் பால்கேவின் குடும்பத்தை தொடர்புக் கொள்ளாமல் பயோபிக் பணிகளில் களமிறங்கியது நியாயமா? என ராஜமௌலி-ஜூனியர் என்.டி.ஆர் குழுவினை நெட்டிசன்களும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.