சினிமா

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் தொடர்பாக நடிகர் ஆர்யா பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
டிடி நெக்ஸ்ட் லெவல்

நடிகர் சந்தானம் நடித்து, ரமேஷ்குமாரின் ஆர்.கே எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று படங்களின் தொடர்ச்சியாக ‘டிடி ரிட்டர்ன்ஸ் டபுள்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க முற்பட்ட போது, ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனமாக வெங்கட் போயனப்பள்ளியின் நிகாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்துள்ளதாகவும், காப்புரிமையை மீறி தனது படத்தலைப்பை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு தடை விதிக்கக்கோரி, ஆர்.கே எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன உரிமையாளர் ரமேஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ஆர்யாவுக்கு உத்தரவு

அந்த மனுவில், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே16ம் தேதி திரைக்கு வர இருப்பதாகக் கூறியுள்ளார். டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, தன்னுடைய படங்களின் தலைப்பை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா, மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் ஆர்யா, நிகாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.