அமரன் திரைப்படத்தால் தங்கள் கல்லூரிக்கு பெருமை கிடைத்துள்ளது சென்னை கிருத்துவ கல்லூரி முதல்வர் குமுதம் செய்திகளுக்கு பிரதிக்யேகமாக தெரிவித்துள்ளார். முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரபேக்கா வர்கீஸ் இருவரும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிஜ கதாபாத்திரங்களான முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவரும் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள் ஆவர்.
கல்லூரியில் பயில்கின்ற போது இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரபேக்கா வர்க்கிசீன் உறவு குறித்துக் காட்டப்பட்டுள்ளது பெரும் மதிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
இந்நிலையில், இது குறித்து முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ஆகியோர் படித்த சென்னை கிருத்துவக் கல்லூரியின் முதல்வர் வில்சன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது, இந்து ரெபேக்கா வர்கீசை ஜனவரி மாதத்தில், மாணவர்கள் மத்தியில் வாழ்வில் ‘உறவுகள் மேம்பாடு’ குறித்த பேச கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அமரன் திரைப்படத்தில் தங்கள் கல்லூரிக்கு பெரும் பெருமை கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுவரை தங்கள் கல்லூரியில் திரைப்படங்களை படம் பிடிக்க அனுமதி அளிக்கவில்லை என்றும் அமரன் திரைப்படத்திற்காக மட்டுமே சிறப்பு அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார்.
அமரன் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இந்த திரைப்படத்தால் இளைஞர்கள் பலர் ராணுவத்திற்கு சேர முன்வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.