சினிமா

இணையத் தொடராகிறது ‘ஏஜெண்ட் டீனா’

விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார்

இணையத் தொடராகிறது ‘ஏஜெண்ட் டீனா’
விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருந்தது. இத்திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் சுமார் ரூ.430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

‘ஏஜெண்ட் டீனா’ தொடர்

இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஏஜெண்ட் டீனா என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தக் கதாபாத்திரத்தில் வசந்தி என்பவர் நடித்திருந்தார். விக்ரம் படத்திற்கு பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்தார். முன்னதாகப் பல்வேறு படங்களில் நடன கலைஞராகப் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து இணையத்தொடர் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளும் ஆரம்பமாகி உள்ளன. இந்தத் தொடரை வேறொருவர் இயக்குகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் ஏஜெண்ட் டீனா என்பவர் யார், விக்ரம் படத்தில் குறிப்பிட்ட 1987ஆம் ஆண்டில் என்ன செய்துக்கொண்டிருந்தார் என்பதை மையப்படுத்தி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.