சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா தற்போது பிசினஸிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். நயன் நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட் அடித்தது ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் வெளியான ஜவான் திரைப்படம். அதன்பின்னர் அவர் நடித்து ரிலீஸான இறைவன், அன்னபூரணி ஆகிய படங்கள் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. அதேநேரம் நயன்தாரா லீடிங் ரோலில் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. அதேபோல், மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். சுந்தர் சி இயக்கவுள்ள இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால், சமூக வலைத்தளங்களில் பிஸியாக காணப்படுகிறார் நயன். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், தனது மகன்கள் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் டிவிட்டரிலும் இன்ஸ்டாவிலும் ஷேர் செய்து வருகிறார். இதனால் சினிமாவில் பார்க்க முடியாமல் போனாலும், சமூக வலைத்தளங்களில் நயனின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நயன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டிவீட் செய்துள்ள அவர், ”எனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது, அதனால் ஏதேனும் தேவையில்லாத பதிவுகள் வந்தால் கண்டுகொள்ள வேண்டாம்” என தனது ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், நயனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேநேரம் நெட்டிசன்களில் சிலர், நயன் போன்ற சினிமா செலிபிரிட்டிகள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுவது எப்படி என எலன் மஸ்க்கை டேக் செய்து கேள்விக் கேட்டு வருகின்றனர்.
அதேபோல், நடிகர் சிம்புவின் டிவிட்டர் அக்கவுண்ட்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதுகுறித்து சிம்பு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஒரேநேரத்தில் சிம்பு, நயனின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மட்டுமின்றி, டிவிட்டர் பயனாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.