Actor Vijay Salary for Thalapathy 69 Movie : ரஜினி, கமல் வரிசையில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார் இளைய தளபதி விஜய். கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சி, அவரை பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக மாற்றியுள்ளது. விஜய்யின் படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை வாரி குவிக்கின்றன. மெர்சல், பிகில், பீஸ்ட், வாரிசு படங்கள் தலா 300 கோடி ரூபாய் வரை வசூலித்தன. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ, 600 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது.
அதேபோல் கடந்த வாரம் ரிலீஸான விஜய்யின் கோட் திரைப்படம், இதுவரை 400 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 அபிஸியல் அப்டேட்(Thalapathy 69 Movie Update) இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை, KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதுவரை தெலுங்கு, கன்னட படங்களை தயாரித்து வந்த KVN புரொடக்ஷன்ஸ், முதன்முறையாக கோலிவுட்டிலும் தடம் பதிக்கிறது. அதிலும் விஜய் ஹீரோவாக நடிக்கும் அவரது கடைசிப் படத்தை தயாரிக்கவுள்ளது.
இதனால் விஜய்க்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளதாம் KVN புரொடக்ஷன்ஸ். இதுதான் இந்தியளவில் அதிகபட்ச சம்பளம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஒரு படத்துக்காக 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 175 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் பிரபாஸ், அல்லு அர்ஜுன் ஆகியோரும் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
இவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டாராம் தளபதி விஜய்(Actor Vijay). அதன்படி தளபதி 69(Thalapathy 69) படத்துக்காக விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் இந்தியளவில் ஒரு ஹீரோ வாங்கும் அதிகபட்ச சம்பளம் என சொல்லப்படுகிறது. தளபதி 69 படத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகும் விஜய், முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். இதனால் தளபதி 69 படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக இருந்தன. இதில், KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து விஜய்யின் கால்ஷீட்டை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் சம்பளம்(Vijay Salary for Thalapathy 69) மட்டுமே 275 கோடி ரூபாய் என்பதால், படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடிக்கும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்யுடன் சிம்ரன், சமந்தா அல்லது பூஜா ஹெக்டே ஆகியோர் ஜோடியாக நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் தளபதி 69 அப்டேட்டுக்காக, விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். லியோ, கோட் படங்களுக்காகவும் விஜய் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.