சினிமா

இந்திய ஜெர்சியில் காண காத்திருக்கிறேன்.. சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்

கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய ஜெர்சியில் காண காத்திருக்கிறேன்.. சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்
இந்திய ஜெர்சியில் காண காத்திருக்கிறேன்.. சாய் சுதர்சனை பாராட்டிய சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

‘சூரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னணி இயக்குநர்களுடன் சிவகார்த்திகேயன் கூட்டணிச் சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் பாராட்டு

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சாய் சுதர்சன் நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. இப்படியே தொடருங்கள். இந்திய ஜெர்சியில் உங்களை காண காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.