சினிமா

கோட் 4 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இவ்வளவா?.. ஃபயர் செய்யும் விஜய் ரசிகர்கள்..

விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம், 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

கோட் 4 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இவ்வளவா?.. ஃபயர் செய்யும் விஜய் ரசிகர்கள்..
கோட் திரைப்படம் 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூல்

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம், கடந்த வாரம் 5ம் தேதி வெளியானது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு உலகம் முழுவதும் ரிலீஸான கோட் படத்துக்கு, முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் ரிலீஸானது கோட்.

அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 700க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் கோட் படத்தை ரிலீஸ் செய்தனர். கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையும் கோட்டுக்கு கிடைத்தது. இந்நிலையில், முதல் வாரத்தின் முடிவில் கோட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் (Goat Movie Box Office Collection) நிலவரத்தை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது கோட். துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கோட் படப்பிடிப்பை நடத்தினார் வெங்கட் பிரபு. அதேபோல், கிராஃபிக்ஸ் பணிகளுக்காகவும் பல கோடிகளை செலவு செய்தது தயாரிப்பு நிறுவனம். இன்னொரு பக்கம் விஜய் மட்டுமின்றி மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல் என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இப்படத்தில் நடித்திருந்தது.

பயங்கரமாக ப்ரோமோஷன் செய்த படக்குழு, முதல் வாரத்திலேயே போட்ட முதலை கையில் எடுத்துவிட வேண்டும் என இறங்கி வேலை செய்தது. இதன் பலனாக முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்தது கோட். விஜய்யின் லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி கலெக்ஷன் செய்திருந்தது. இந்த சாதனையை கோட் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 126 கோடி ரூபாய் வசூலித்தது கோட்.

அதேபோல், கோட் திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளில் கோட் வசூல் 200 கோடியை கடந்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளிலும் கோட் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. அதன்படி கோட் 3வது நாள் கலெக்ஷன் (Goat Box Office Collection) 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் வாரத்தின் கடைசி நாளான நேற்று, கோட் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 60 முதல் 70 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கோட் திரைப்படத்தின் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். அதில், அவர் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக வைரலாக்கி வருகின்றனர்.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் 111 கோடியும், கர்நாடகாவில் 21.70 கோடியும், கேரளாவில் 10.65 கோடியும், ஆந்திராவில் 10.05 கோடியும், இந்தியாவின் பிற மாநிலங்களில் 13.55 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், வெளிநாடுகளில் 121.70 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.