மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 - 2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிசான் கிரெடிட் கார்டு வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பட்ஜெட்டில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் 2025
Budget 2025: கிராம பொருளாதாரத்தில் புதிய புரட்சி... பட்ஜெட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.