ஆன்மிகம்

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Weekly Rasi Palan by Astrologer Shelvi
weekly horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம்:

எண்ணம்போல் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பணியிடத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகளும் அதனால் மேன்மைகளும் ஏற்படும். இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடும். வீட்டில் நிம்மதி நிலவும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். வீடு, வாகனம் மாற்ற புதுப்பிக்க சந்தர்ப்பம் உண்டு. செய்யும் தொழிலில் லாபச் சக்கரம் சீராகச் சுழல ஆரம்பிக்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பலகாலக் கனவுகள் நனவாகும். கலை, படைப்புத் துறையினர்க்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பயணத்தில் அவசரம் வேண்டாம். சுளுக்கு, நரம்பு உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு ரம்யமாக்கும்.

ரிஷபம்:

உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரத்தொடங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஆதாயமும் பெருகும். அதேசமயம் சோம்பல் தவிர்ப்பது நல்லது. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களால் ஆதாயம் கிட்டும். பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். செய்யும் தொழிலில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர் பொறுமையால் பெருமை பெறலாம். வாகனப் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்யுங்கள். அடிவயிறு, பாதம், உணவுக்குழாய் உபாதைகள் வரலாம். சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.

மிதுனம்:

பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலகட்டம். பணி யிடத்தில் பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமாகலாம். பொறுமையால் அவற்றை நிச்சயம் பெறலாம். இல்லத்தில் இனிய சூழல் நிலவும். முன்னோர் வழிபாட்டினைச் செய்ய நேரம் அமையும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். செய்யும் தொழிலில் சிரமங்கள் மறையும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்தின் ஆசி கிட்டும். கலை, படைப்புத் துறையினரின் பலநாள் கனவுகள் நனவாகும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி, சுவாச உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.

கடகம்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும் சக் காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளை திட்டமிட்டு செய்யுங்கள். மேலதிகாரிகளிடம் பேசும்போது உணர்ச்சிவசப்படல் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். ஆபரணங்களை இரவல் தருவது, பெறுவதைத் தவிருங்கள். சுபகாரியங்களுக்காக்காக கடன் வாங்க நேரிடலாம். செய்யும் தொழிலில் தேவையற்ற முதலீடுகளைத் தவிருங்கள். அரசு, அரசியல் துறையினருக்கு செல்வாக்கு உயரும். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியங்களைப் பகிர வேண்டாம். பயணங்களில் வேகம் கூடாது. அடிவயிறு, தோள்பட்டை, மூட்டு உபாதைகள் வரலாம். குருபகவான் வழிபாடு கோடி நன்மை தரும்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் இருந்தால், பெருமைகள் சேரும். அலுவலகத்தில் புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். இல்லத்தில் புது வெளிச்சம் தெரியும். பணத்தை முறையாகச் செலவழியுங்கள். கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்கள். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் மாற்றம் உண்டாகும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு கவனம் தேவை. மாணவர்கள் மறதியை மறப்பது முக்கியம். கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கேற்ப வாய்ப்பு வரும். இரவுப் பயணத்தை தவிருங்கள். மன அழுத்தம், எலும்பு, நரம்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.

கன்னி:

அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் கவனச் சிதறல் கூடாது. யாருடைய தவறையும் பெரிதுபடுத்திப் பேச வேண்டாம். குடும்பத்தில் சுமுகச் சூழல் நிலவும். விசேஷங்களை முன் நின்று நடத்தும் சந்தர்ப்பம் வரும். வாரிசுகளின் நடவடிக்கைகளை அன்பால் திருத்துங்கள். செய்யும் தொழிலில் நடைமுறை சட்டதிட்டங்களை மீறாமல் இருப்பது முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொது இடங்களில் ஜம்பம் தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத்துறையினர், எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள். இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்க வேண்டாம். கழிவு உறுப்பு, கண், தொண்டை உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.

விருச்சிகம்:

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். சிலருக்கு பதவி, பொறுப்புடன் இடமாற்றம் வரும். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக் கசப்புகள் மறையும். உடல்நலத்தில் ஆரோக்யம் மேம்படும். வீடு, மனை வாங்க, புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் தொழிலில் மாற்றங்கள் செய்யும் சூழல் வரலாம். அரசு, அரசியல் துறையினர் யாருக்கும் வாக்குறுதிகளைத் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் சிறிய வாய்ப்பானாலும் சின்சியராக செய்யுங்கள். வாகனப்பழுதில் அலட்சியம் கூடாது. அடி வயிறு, பாதம், நரம்பு உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

துலாம்:

சங்கடங்கள் நீங்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் லுவலகத்தில் திறமைக்கு ஏற்ப பெருமைகள் வந்து சேரும். தலைகனத்தை அறவே தவிருங்கள். வீட்டில் ஒற்றுமை நிலவும். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் வெட்டி கௌரவமும் தவிர்ப்பது அவசியம். வரவை திட்டமிட்டு செலவிடுங்கள். செய்யும் தொழிலில் செழிப்புக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அரசு, அரசியல் துறையினர் வேண்டாத நட்புகளிடமிருந்து விலகுங்கள். கலை, படைப்புத் துறையினர்க்கு சீராக வாய்ப்புகள் வரும். பயணத்தில் நிதானம் தேவை. காது, மூக்கு, தொண்டை உபாதைகள், வரலாம். கணபதி வழிபாடு களிப்பு தரும்.

தனுசு:

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் முழுமையான திட்டமிடல் இருந்தால், எதிர்காலத்திலும் முன்னேற்றம் தொடரும். தொடரும். இல்லத்தில் சந்தோஷ வெளிச்சம் பரவும். குடும்பத்துப் பெரியவர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். வாரிசுகளால் பெருமை ஏற்படும். உறவுகளால் நன்மைகள் உண்டு. செய்யும் தொழிலில் வீண் சஞ்சலம் தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்தை மதியுங்கள். கலை, படைப்புத் துறையினர் சாதனை செய்ய வாய்ப்பு உண்டு. பயணத்தில் ஓய்வு முக்கியம். அஜீரணம், அசிடிட்டி, புளித்த ஏப்ப உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

உயர்வுகளுக்கு உத்தரவாதம்` ” கிட்டும் காலகட்டம். பணியிடத்தில் உடனிருப்போர் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். குடும்பத்தில் சந்தோஷச் சூழல் உருவாகும். பணவரவு சீராகும். வீடு, வாகனம் மாற்றும் முயற்சிகள் கைகூடும். சுபகாரியங்களை முன் நின்று நடத்தும் சூழல் உருவாகும். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். அரசு, அரசியல் துறையினருக்கு திடீர் பதவி, பொறுப்புகள் வந்து சேரலாம். கலை, படைப்புத் துறையினர்க்கு சலிப்பு, சஞ்சலம் அறவே கூடாது. பயணங்களில் உடைமைகள் பத்திரம். தலைவலி, மன அழுத்தம், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமையாக்கும்.

கும்பம்:

உழைப்பினால் உயரவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். எந்த சமயத்திலும் சோம்பல் தலைதூக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்பில் அவசரம் வேண்டாம். வீட்டில் விட்டுக் கொடுத்துப் போவதே நல்லது. தடைபட்ட விசேஷங்கள் கைகூடி வரத்தொடங்கும். பிறமொழியினரிடம் எல்லைவகுத்துப் பழகுங்கள். செய்யும் தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் சோம்பலைத் தவிர்த்து செயல்படுங்கள். கலை, படைப்புத் துறையினர் தீயசகவாசத்திடமிருந்து ஒதுங்குவதே நல்லது. தொலைதூரப் பயணங்களில் போதுமான ஓய்வு முக்கியம். சோர்வு, கால், பல் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும்.

மீனம்:

பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகரிகள் ஆதரவு கிட்டும். பிறர் குறையைப் பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். சுபகாரியங்களுக்காக கடன் வாங்க நேரிடலாம். மனம்விட்டுப் பேசினால், இளம் வயதினரின் மனம்போல மாங்கல்யம் கைகூடும். வர்த்தகம், வாணிபத்தில் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேளுங்கள். அரசு, அரசியல் துறையினர், வாக்குவாத`ம் செய்தால், செல்வாக்கு குறையும். கலை, படைப்புத் துறையினர், செல்லும் இடங்களின் சட்டதிப் சட்டதிட்டங்களை மதியுங்கள். பயணத்தில் சட்டமீறல் கூடாது. அஜீரணம், பரம்பரை நோய் அறிகுறிகள் தெரியலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்