ஆன்மிகம்

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு ஊர்வலம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து அவர்களது வழக்கப்படி சக்தி என்னும் அம்மனுக்கு திருவீதி உலா நடத்தினர்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் கத்தியை ஏந்தி அவர்களது உடலில் காயங்களை ஏற்படுத்தி தங்களை வருத்திக் கொண்டு அம்மனை அழைத்தனர்.
கத்தியால் காயப்படுத்திக் கொண்டு கூப்பிட்டால் மட்டுமே சக்தி மனமிரங்கி வருவாள் என்பது அவர்களது ஐதீகமாக உள்ளது.

Image

இதனால் இன்று (ஏப்ரல் 12) சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கத்தியால் அவர்களது உடலில் காயங்களை ஏற்படுத்தி தங்களை வருத்திக்கொண்டு அம்மனை அழைத்தனர். பின்னர், முக்கிய விதி வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, பக்தர்கள் மாரியம்மன் திருக்கோயிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.