ஆன்மிகம்

ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!
horoscope: predicted by astrologer shelvi
horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம்:

சுமுகமான போக்கு நிலவும் காலகட்டம்க. அலுவலகத்துல ஆதரவான சூழல் நிலவும்க. மேலிடத்தால் பாராட்டு, பெருமை கிட்டும்க. வாழ்கைத் துணை உடல்நலத்துல அக்கறை அவசியம்க. குழந்தைகளால மகிழ்ச்சி மலரும்க. சுபகாரியத் தடைகள் விலகும்க. பணவரவு அதிகரிக்கும்போது சேமிப்பை உயர்த்தறது அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க திட்டமிட்டு செயல்படறது அவசியம்க. செய்யும் தொழில்ல லாபம் அதிகரிக்கும்க. வாகனப் பயணத்துல வேகம் வேண்டாம்க. நரம்பு, எலும்பு,ஒற்றைத்தலைவலி உபாதைகள் வரலாம்க. அனுமனை ஆராதியுங்க. ஆனந்தம் நிறையும்.

ரிஷபம்:

தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம்க. பணியிடத்துல சாதகங்கள் உருவாகும்க. சோம்பலை விலக்கிட்டு செயல்பட்டா நன்மைகள் தேடிவரும்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. அதுக்கு வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்க. வீடு, மனை, வாகன யோகம் கைகூடும்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகள், தொழில் மாற்றங்கள் லாபம் தரும்க.. அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கலாம் உணர்ந்து செயல்படுங்க. பயணங்கள்ல. உடைமைகள்ல கவனம் அவசியம்க. அலர்ஜி, தோல்நிறமாற்றம், சளி, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. பெருமாள், தாயாரை தரிசனம் பண்ணுங்க. வாழ்க்கைல புது மலர்ச்சி ஏற்படும்.

மிதுனம்:

நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல பணிவுதான் உங்களை உயர்த்தும்க. எதிர்பாரத இடமாற்றம் வந்தா தவிர்க்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள் வரும்க. அநாவசிய கேளிக்கை தவிர்த்தா கடன்கள் சுலபமா அடையும்க. வாரிசுகள் ஆரோக்யத்துல அக்கறை செலுத்துங்க. செய்யும் தொழில்ல சோம்பல் இல்லாத முயற்சிகளால முன்னேறலாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பிறருக்கு ஜாமீன்தருவதைத் தவிர்க்கμம்க. வாகனத்துல சிறுபழுது இருந்தாலும் உடனே சீர் செய்யுங்க. தலைசுற்றல், முதுகு தண்டுவட உபாதைகள் வரலாம்க. அடிவயிறு, கழிவு உறுப்பு, கண் உபாதைகள் வரலாம்க. இஷ்டப்பட்ட மகானைக் கும்பிடுங்க. வாழ்க்கை ஏற்றமாகும்.

கடகம்:

கவனமாகச் செயல்பட்டால் ஏற்றம் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல அவசரமும் அலட்சியமும் வேண்டாம்க. புறம்பேசுவோரால் பழி ஏற்க நேரிடலாம் கவனமா இருங்க. குடும்பத்துல குதர்க்கப் பேச்சு தவிர்க்கறது நல்லதுங்க.. குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுங்க. தரல் பெறலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டுங்க.. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகள் வேண்டாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க அடக்கமா செயல்படμம்க. பயணத்துல வேகத்தை அறவே குறையுங்க. அஜீரணம், அலர்ஜி, தூக்கமின்மை உபாதைகள் வரலாம்க.துர்க்கையைத் தூயமனதோட கும்பிடுங்க. வாழ்க்கை துளிர்க்கும்.

சிம்மம்:

அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல சிறு அலட்சியமும் கூடாதுங்க. இடமாற்றம் வந்தா ஏற்றுக்கறது நல்லதுங்க. மனையில மகிழ்ச்சி மலரும்க. வாழ்க்கைத் துணை ஆலோசனைகளுக்கு மதிப்பு குடுங்க. பழைய கடன்களை அடைக்க சொத்துகளில் ஏதாவது விற்கும் முயற்சி இருந்தா உடனே அதைச் செய்யுங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொது இடங்கள்ல நாவடக்கம், அவையடக்கத்துடன் இருங்க. பயணப்பாதையில் எதிர்பால் நட்பிடம் எச்சரிக்கையா இருங்க. மூட்டுகள், எலும்பு, மறதி பிரச்னைகள் வரலாம்க. சிவன் பார்வதியை வணங்குங்க. வாழ்க்கை சீராகும் சிறப்பாகும்.

கன்னி:

நல்லவை அதிகரிக்கும் காலகட்டம்க. பணியிடத்துல பெருமை, பாராட்டு கிட்டும்க. உடனிருப்போரை உதாசீனப்படுத்தாம இருந்தா உயர்வுகள் நிலைக்கும்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. சுபகாரியத் தடைகள் நீங்கும்க. பழைய கடன்கள் சுலபமா பைசல் ஆகும்க. வாரிசுகள் ஆரோக்யம் சீராகும்க. செய்யும் தொழில்ல நிதானம் முக்கியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க புதிய திட்டங்களை உரிய ஆலோசனைபெற்று செய்யறது அவசியம்க. அவசியமற்ற இரவுநேரப் பயணத்தை தவிர்ப்பது நல்லதுங்க.. ரத்தத் தொற்றுநோய், சுவாசம், ஜீரணக் குறைபாடுகளை உடனே கவனியுங்க. லட்சுமி நரசிம்மரை வணங்குங்க. வாழ்க்கை இனிக்கும்.