Anna University Arrear Exam 2024 : 2001 அரியர் பாய்ஸ்.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க

Anna University Arrear Special Exam 2024 : 20 ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்பில் அரியர் வைத்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 24, 2024 - 13:00
Aug 24, 2024 - 14:34
 0
Anna University Arrear Exam 2024 : 2001 அரியர் பாய்ஸ்.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க
aana university announcement 2001 ariyar exam

Anna University Arrear Special Exam 2024 : அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 18ஆம்  தேதி மாலை 4 மணியுடன் முடிவடைய உள்ளது 

வரும் நவம்பர் டிசம்பர் மாதம் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் இந்த சிறப்பு தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது சென்னை விழுப்புரம் ஆரணி சேலம் ஈரோடு கோவை திருச்சி மதுரை நெல்லை நாகர்கோவில் உள்ளிட்ட சிறப்பு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது இதற்காக ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் அரியர் வைத்துள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் 225 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் இதற்காக டிடி எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு முன்னதாக அரியர் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் என குறிப்பிட்டு தபால் மூலமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம் காமராசர் பல்கலைக்கழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழக உள்ளிட்டவற்றின் கீழ் மாணவர் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று முதல் மற்றும் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அந்த பல்கலைக்கழகங்கள் கீழ் நடத்தப்பட்டன மூன்றாவது செமஸ்டர் முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன எனவே மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் கீழ் பொறியியல் படிப்பில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்கள்  இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த மேலதிக விவரங்களை aucoe.annauniv.edu coe1.annauniv edu ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் மற்றும் தேர்வு மையங்களும் இந்த இணையதளங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow