GOAT RunningTime: கோட் ரன்னிங் டைம் அப்டேட்... கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்... விஜய் ரசிகர்கள் வார்னிங்!

விஜய் நடித்துள்ள கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், கோட் ரன்னிங் டைம் அதிகம் என இப்போதே ரசிகர்கள் வார்னிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

Aug 23, 2024 - 20:22
Aug 24, 2024 - 10:01
 0
GOAT RunningTime: கோட் ரன்னிங் டைம் அப்டேட்... கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம்... விஜய் ரசிகர்கள் வார்னிங்!
GOAT Running Time Update

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது என்பது ரசிகர்களுக்கு இன்னும் ஹைப் கொடுத்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. எப்போதுமே சிங்கிள் ஹீரோவாக மாஸ் காட்டி வரும் விஜய், லியோவை தொடர்ந்து கோட் படத்தில் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியுடன் களமிறங்குகிறார்.

கோட் படத்தின் கதை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபுவே வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனாலும், அவர் சொன்னதை விடவும் இன்னும் பல தரமான சம்பவங்கள் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் வெளியான கோட் படத்தின் ட்ரெய்லரில் அதனை பார்க்க முடிந்தது. ஆக்ஷன் ப்ளஸ் ஃபேமிலி சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது கோட். இந்நிலையில், கோட் படத்தின் ரன்னிங் டைம் பற்றி அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கோட் சென்சார் அப்டேட் வெளியாகிவிட்டது, அதன்படி, இந்தப் படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது கோட் ரன்னிங் டைம் பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதன்படி கோட் மொத்தம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் 40 நொடிகள் வரை ஓடும் என அப்டேட் கிடைத்துள்ளது. இதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 35 நிமிடங்களும், இரண்டாம் பாதி ஒரு நிமிடம் 24 நிமிடங்களும் எனத் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை கோட் ரன்னிங் டைம் இருப்பதால், விஜய் ரசிகர்கள் இப்போதே வார்னிங் செய்யத் தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க - பொங்கல் ரேஸில் விடாமுயற்சி... குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி மாற்றம்

கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால், ரசிகர்களால் மூன்று மணி நேரம் வரை போர் அடிக்காமல் படம் பார்க்க முடியும். இல்லையென்றால் கோட் படத்தின் ரன்னிங் டைம் ரசிகர்களுக்கு அதிருப்தி கொடுத்துவிடும். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 உட்பட இன்னும் சில படங்கள், ரன்னிங் டைம் அதிகம் இருந்ததால் ரசிகர்களால் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. அதன்பின்னர் இந்தியன் 2 படத்தில் இருந்து 13 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டன. அதேபோல் கோட் படத்துக்கும் சிக்கல் வந்துவிடப் போகிறது என ரசிகர்கள் வார்னிங் செய்து வருகின்றனர்.

அதேநேரம் விஜய் விரைவில் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கவுள்ளார். அதனால் அவருக்காக கோட் ரன்னிங் டைம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை. விஜய்யை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஸ்க்ரீனில் பார்க்க ரெடியாக உள்ளோம். விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா ஆகியோரும் நடித்துள்ளதால், அவர்களுக்கும் ஸ்க்ரீனில் ஸ்பேஸ் வேண்டும். அதனால் கோட் ரன்னிங் டைம்-ஐ குறைக்க வேண்டாம் எனவும் ரசிகர்கள் வாய்ஸ் கொடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow