Vinesh Phogat: மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு.. வலிமை இழந்து விட்டதாக உருக்கம்!

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.

Aug 8, 2024 - 06:56
 0
Vinesh Phogat: மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு.. வலிமை இழந்து விட்டதாக உருக்கம்!
Vinesh Bhogat Retirement

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 2024 இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை வென்றார். துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

மேலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் பெறும் வாய்ப்பு உருவானது. அந்த நம்பிக்கையை உருவாக்கியவர் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் வினேஷ் போகத் மற்றும் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸுடன் மோதினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் குஸ்மான் லோப்ஸை வீழ்த்தி அபார வெறி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

இந்திய நேரப்படி இன்று இரவு 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. வினேஷ் போகத்தும் பதக்க கனவில் இருந்தார். ஆனால் இந்த கனவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வேட்டு வைத்தது. அதாவது 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத்,100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்துள்ளது. 

வினேஷ் போகத்100 கிராம் எடை அதிகமாக இருந்ததை உறுதி செய்த இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உறுதி செய்தது. இறுதிப்போட்டிக்கு முன்பாக 2 கிலோ எடை குறைந்து இருந்ததை வினேஷ் போகத் அறிந்து கொண்டார். இதனால் அவர் உணவு உண்ணாமல், இரவு முழுக்க அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். தீவிர உடற்பயிற்சியின் மூலம் ஒரே இரவில் 1.9 எடை குறைத்துள்ளார். முடிவில் ,100 கிராம் எடையை குறைக்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் உடற்பயிற்சி மேற்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது. 

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர். ''வினேஷ் போகத் நீங்கள் இப்போதே தங்கம் வென்று விட்டீர்கள். வலிமையுடன் திரும்பி வாருங்கள். நாடே உங்களுடன் இருக்கிறது'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் தோற்று விட்டேன். உங்கள் கனவு, எனது தைரியம் எல்லாம் உடைந்து விட்டது. எனக்கு இப்போது வலிமை இல்லை. மல்யுத்தத்துக்கு (2001-2024) குட்பை. அனைவரும் என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்'' என்று கூறியுள்ளார்.  வினேஷ் போகத்தின் ஓய்வு முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow