K U M U D A M   N E W S

தீபாவளி கொண்டாட்டம் – குப்பை கூளமான சென்னை

சென்னையில் தீபாவளியையொட்டி தெருக்களில் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி மும்முரம்

கோவையில் அதிர்ச்சி சம்பவம் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்

எங்களால் இனிமேல் பொறுக்க முடியாது.. தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#BREAKING: வேலைநிறுத்த போராட்டம் '100 மில்லியன் டாலர் இழப்பு’ - சாம்சங் நிறுவனம்

தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள் விவகாரம்: தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை... தொழிலாளர்கள் உறுதி!

தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

"ஒரு மாத ஊதியம் போனஸாக வேண்டும்" - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

“‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்.. Win Win Solution” - கி.வீரமணி பாராட்டு!

‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ‘‘கடிதோச்சி மெல்ல எறிதல்’’ என்பதைக் கடைப்பிடித்து, தமிழ்நாடு அரசு Win Win Solution என்ற தீர்வைக் கண்டுள்ளார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.