K U M U D A M   N E W S

துணை முதலமைச்சராகும் உதயநிதி மீது விமர்சனம்... “பாஜக ஒரு செல்லாக் காசு...” சேகர்பாபு பதிலடி!

தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம் என்பதனால் தான், மக்கள் பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை பரிசாக அளித்தனர்; தமிழக மக்களிடம் செல்லாக் காசாகிப்போன பாஜகவின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

லிப்ஸ்டிக் விவகாரம் – மீண்டும் வைரலாகும் தபேதார் மாதவியின் வீடியோ

அதிக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டபேதார் மாதவியின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

விசிக மூன்றாவது குழலாக என்றும் இருக்கும்.. திருமா சொன்னதும் ஆக்சனில் இறங்கிய திமுகவினர்

“திமுக, தி.க. என்னும் இரட்டை குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக விசிக என்றென்றும் இருக்கும். தொடர்ந்து சனாதன சக்திகளுக்கு எதிராக நாங்கள் முழங்குவோம்” என உறுதியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன்

#JUSTIN || நாளை நாமக்கல் செல்கிறார் சங்கர் ஜிவால்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து விவகாரம். ஒரு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாளை நாமக்கல் செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் - கருணாஸ்

திமுகவின் 100-வது ஆண்டில் உதயநிதி முதலமைச்சராக இருப்பார் என காஞ்சிபுரத்தில் நடைபெறும் பவள விழாவில் தெரிவித்துள்ளார் கருணாஸ்

தமிழக மீனவர்கள் பிரச்னை... ராகுல் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். 

ஏடிஎம் கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவு

நாமக்கல் அருகே என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையன் ஜூமாந்தீனின் உடற்கூராய்வு நிறைவடைந்தது. குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நாமக்கல் வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது.

வெடி விபத்து - பட்டாசு ஆலை உரிமம் ரத்து

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.