''பவன் கல்யானா ? அது யாரு... சினிமாக்காரர்களை பற்றி கேட்கவேண்டாம்'' - மதுரை ஆதீனம்
திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் வைணவம், தான் சைவம் அது குறித்து பேச மாட்டேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆந்திர DGP திருமலா ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் முன்ஜாமின் கோரி ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேச தைரியம் இருக்கிறதா என்று திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்பேரில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழநி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி மீது தவறான தகவல்களை பரப்புவது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவின் கீழ் பழநி அடிவார போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tirupati Laddu Sales : என்னதான் தொடர் சர்ச்சை கருத்துகள் நிலவி வந்தாலும், ’பக்தர்களிடம் எப்போதும் நான் தான் கிங்கு’என்று கூறுவதுபோல் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகின்றன திருப்பதி லட்டுகள். ஆம்.. திருப்பதி லட்டுக்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்று கடந்த 4 நாட்களில் லட்டுகளின் விற்பனை விவரம் நமக்கு பறைசாற்றுகிறது.
Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நெய்வேத்திய பிரசாதம் தயாரிப்பிற்கும் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.