தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நேரில் அசோக் குமார் ஆஜர் ஆகியுள்ளார்.