K U M U D A M   N E W S

Tamilnadu

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும்: தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!

நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழருக்கு வாக்களித்த தருமருக்குப் பாராட்டுக்கள் - நயினார் நாகேந்திரன் ஆவேச பேட்டி!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆர்ப்பாட்டம்: ஆளும் அரசுக்கு நேரடி எச்சரிக்கை!

பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

முதல்முறையாக காவலர் தின கொண்டாட்டம்.. 46 காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருதுகள் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக செப்டம்பர் 6 இன்று காவலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தாம்பரம் காவல்துறையில் “தமிழக காவலர் தினம்” கொண்டாட்டம் கோலாகலம்!

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் "தமிழ்நாடு காவலர் தினம்" உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.