K U M U D A M   N E W S
Kumudam Ad

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸார் பேச்சை கேட்காத மாணவர்கள்.. ராட்சத அலையில் சிக்கி பலியான பரிதாபம்

மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற ஏழு மாணவர்களில் இரண்டு மாணவர்களை கடலலை இழுத்துச் சென்றதையடுத்து, ஒருவர் இறந்த நிலையில் மீட்டதையடுத்து, மற்றொருவருக்கு தீவிர சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

IND vs NZ 1st Test Match 2024 : 5 வீரர்கள் டக் அவுட்.. 46 ரன்களுக்கு ஆல்-அவுட்.. இந்திய மண்ணிலேயே இதுதான் மோசம்

IND vs NZ 1st Test Match 2024 Highlights : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு... கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.