K U M U D A M   N E W S

Protest

Leopard Issue : "இதுக்கு மேல முடியாது.." - உயிர் பயத்தில் வீதிக்கு வந்த மக்கள்.. சேலத்தில் பரபரப்பு

Mettur People Protest To Catch Leopard : மேட்டூர் அருகே சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் சிறுத்தை புலியை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தினம் தினம் ஒரு பஞ்சாயத்து....எப்படி இருந்த பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சாலை மறியல்.. ஸ்தம்பித்த ECR! புதுச்சேரியில் உச்சக்கட்ட பரபரப்பு

Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயில் நிலம் ஏலம் விட அறிவிப்பு... போராட்டத்தில் குதித்த மக்கள்

Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADMK Protest : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு.. ஒன்று திரண்ட கிராம மக்கள்...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

பள்ளியில் வளைகாப்பு நடத்திய மாணவிகள்..ஆசிரியை பணியிடை நீக்கம்.. போராட்டத்தை கையில் எடுத்த பிற ஆசிரியர்கள்

பள்ளியில் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தி அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்-ஆக மாணவிகள் பதிவிட்டதால் , வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து போராட்டம்.

போராட்டத்தை கைவிடாவிட்டால் நடவடிக்கை - சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை கைவிடாவிட்டால் வரும் திங்கள்கிழமை தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஒருவழியாக மமதாவின் வேண்டுகோளை ஏற்ற மருத்துவர்கள்.. 41 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.