K U M U D A M   N E W S

Omni Bus

ஆம்னி பேருந்தில் ரூ.2.15 கோடி பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

#BREAKING | ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது, வழக்கமான கட்டணமே தொடரும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கமா? - நீதிமன்றம் புதிய தகவல்

பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை எனவும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.