இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
"மாநகராட்சி கவனிப்பது கமிஷன், லிப்ஸ்டிக் பிரச்னையை மட்டுமே" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றாரா? அல்லது தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசிவாங்க சென்றாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Senthil Balaji : "பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.
DMK Worker Death in Dindigul : திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக ஒன்றிய பொருளாளர் மாசி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
CM Stalin Delhi Visit To Meet PM Narendra Modi : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என் கூட வா நீ... செந்தில் பாலாஜிக்கு அன்பு கட்டளையிட்ட பொன்முடி !!
"என் வாழ்நாள் முழுவதும்" வார்த்தை தழுதழுக்க செந்தில் பாலாஜி கொடுத்த முதல் பேட்டி
புழல் சிறையில் இருந்து வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
"பஹ்ரைன் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என தெரிவித்துள்ளார். என்மீதான பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன் எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுகவில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது எனவும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
RB Udhayakumar About CM Stalin Delhi Visit : வெளிநாடு பயணம் பூஜ்ஜியத்தை போன்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள டெல்லி பயணமும் பூஜ்ஜியத்தில் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
Actor Soundararaja Criticize CM Stalin Tweet : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில், அதனை துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சித்துள்ளார்.
BJP SG Suryah on Senthil Balaji Jail : அதிக நாட்கள் சிறையில் இருந்ததில் ஆ.ராசாவை, செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
CM MK Stalin Welcomes Senthil Balaji : சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.