நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
நீலகிரியில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | MKStalin | DMK | Nilgiris News | Ooty
சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மூளை சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் தெரிவித்தார்.
மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.
கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருக்கு உணவளித்து அழகு பார்க்காமல் உடனுக்குடன் மரண தணடனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருந்தனர்.
மருத்துவ மாணவி கொல்லப்பட்டவுடன், அதை சந்தீப் குமார் கோஷி தற்கொலை என மாணவியின் பெற்றோரிடம் கூறியிருந்தார். மேலும் மருத்துவ மாணவியின் கொலையை அவர் மறைக்க முயன்றதாகவும், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
Kolkata Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.
''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.