விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கே லாபம்... - செல்வப்பெருந்தகை அதிரடி
தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது.