K U M U D A M   N E W S

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.. ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரமாக வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

ஆஸ்கர் விருதுக்கு லாப்பட்டா லேடீஸ் பரிந்துரை

ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கு கிரண்ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் இந்திய பிலிம் சேம்பர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தங்கலான், வாழை, மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்சல் ஆகிய படங்கள் போட்டியில் இருந்தன

Pushpa 2 Update : ’புஷ்பா 2’ படத்தில் இரண்டு புஷ்பாக்களா! காமியோ கொடுக்கப்போகும் அந்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

Cricket Player David Warner in Pushpa 2 The Rule Movie Update : அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படத்தில், கிரிக்கெட்டின் புஷ்பா என அழைக்கப்படும் ஒரு வீரர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Arakkonam : திடீரென பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு.. அரக்கோணம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

Arakkonam Bus Stand Roof Top Collapse : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலைய வளாக மேற்கூரை பூச்சு பெய்ந்து விழுந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Meiyazhagan Trailer: “நாம கடந்து வந்த பொற்காலம்..” ரசிகர்களை எமோஷனலாக்கிய மெய்யழகன் ட்ரெய்லர்!

Meiyazhagan Movie Trailer Released : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Gold Rate Update : நகைப்பிரியர்களை உலுக்கும் தங்கம் விலை... ரூ. 60,000-ஐ நெருங்கிய 1 சவரன்!

Gold Rate Update in Chennai : சென்னையில் இன்று ஆபாரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ. 55, 840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Devara Pre Release Event : தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் கேன்சல்... சம்பவம் செய்த ரசிகர்கள்... மன்னிப்பு கேட்ட ஜூனியர் NTR!

Devara Pre Release Event Cancelled : ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதனிடையே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின்...” பதவியேற்ற கையோடு இலங்கை அதிபர் சொன்ன விஷயம்..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடி பதவியேற்றுள்ள இடதுசாரி அதிபர் அநுர குமார திசநாயக சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்துள்ளார்.