Headlines Now | 2 PM Headlines | 22 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
Headlines Now | 2 PM Headlines | 22 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
Headlines Now | 2 PM Headlines | 22 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ திரைப்படத்தில், மோதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
எழுத்தாளரின் வாழ்க்கையை பாதிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்கள்; புதுமையான கதைக்களத்துடன் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது!
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபி தெரிவித்துள்ளது. விசாரணையில் எந்த விதிமீறலும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 5 PM Headlines | 21 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
மாநில வளர்ச்சிக்கு உதவும் - பிரதமர் மோடி | PM Modi | Kumudam News
கோவையில், தொழிலதிபர் பாலுசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவிசெய்ய மணம் இல்லாத - தவெக விஜய் | TVK Vijay | Kumudam News
கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
"விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது" என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பொய்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவரது பேச்சுகள் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.