K U M U D A M   N E W S

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வார்த்தை போர்... நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் சபை நாகரிகம் இல்லாமல் பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

#BREAKING | பயணிகள் கவனத்திற்கு - ரயில்கள் திடீர் நிறுத்தம்.. மக்கள் அவதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தம்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்.. கொந்தளித்த மக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X தள பதிவு.. EPS-க்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

This Week OTT Release: மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

தீபாவளி பலகாரங்கள்னால உடல் எடை கூடும்னு பயமா? கவலையே வேணாம்.. இந்த டிப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்ற பயன் சிலருக்கு தோன்றும். இதனை தவிர்க்க சில டிப்ஸ்-களை பகிந்துள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா .

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்

ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீணாய் போகும் மக்கள் பணம்... கொட்டும் மழையில் தார் சாலை..

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைத்து வருகின்றனர். மழை பெய்யும்போது தார் சாலை அமைத்தால் எப்படி தரமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராணிப்பேட்டை; அதிகாலை முதல் பரவலாக மழை ராணிப்பேட்டை |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.