பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்? - தமிழக அரசு விளக்கம்
பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக சமூக வலைதளத்தில் வந்த செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
பழநி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக சமூக வலைதளத்தில் வந்த செய்தியை நம்ப வேண்டாம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது
''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.