K U M U D A M   N E W S

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு.. CBI-க்கு அவகாசம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் 

#JUSTIN : வேலூரில் ரயில் சேவை பாதிப்பு.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

திருப்பூரில் பயங்கரம்... மாமனாரை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக் கொண்ட மருமகன்

திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ameer: மகா விஷ்ணு பஞ்சாயத்து... CM சார் நோட் திஸ் பாயிண்ட்... கருத்து சொன்ன இயக்குநர் அமீர்!

சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.