K U M U D A M   N E W S

ஆளுநர் மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோலாகலமாக நடக்க உள்ள முதல் மாநாடு.. கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்

Meiyazhagan Trailer: “நாம கடந்து வந்த பொற்காலம்..” ரசிகர்களை எமோஷனலாக்கிய மெய்யழகன் ட்ரெய்லர்!

Meiyazhagan Movie Trailer Released : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

Meiyazhagan: “மெய்யழகன் படத்த விமர்சிக்க வேண்டாம்... வசூல் பத்தி கவலைபடாதீங்க..” சூர்யா சொன்ன சீக்ரெட்!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சூர்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!

RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் சொன்ன புதிய தகவல்!

இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs BAN : சாதனைகளை தகர்த்தெறிந்த அஸ்வின்.. வார்னே, மெக்ராத் எல்லாம் அப்புறம் தான்

Ravichandran Ashwin Record in IND vs BAN 1st Test : ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.

LIVE : Thirumavalavan Speech : தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் - திருமா

VCK Leader Thirumavalavan About Liquor Ban in Tamil Nadu : விசிக தலைவர் திருமாவளவன் x பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. மத்திய அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.