K U M U D A M   N E W S

MP

Euro 2024 Final: யூரோ சாம்பியன் ஃபைனல்... இங்கிலாந்து அணியை போராடி வென்ற ஸ்பெயின்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்கராஸ்... தடுமாறிய முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்!

பாரம்பரியமிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலை, தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஸ்பெயினின் இளம் வீரர் அல்கராஸ் சாதனை படைத்துள்ளார்.

தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? - ரெய்னா, ஹர்பஜன் சொன்னது என்ன?

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் ஆகியோரிடம் வர்ணனையாளர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அம்பத்தி ராயுடு-யூசுப் பதான் சிக்ஸர் மழை... பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு அதிரடியில் வெளுத்து கட்டினார். 30 பந்தில் 5 பெளண்டரிகள் 2 சிக்கர்களுடன் 50 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு சயீத் அஜ்மல் பந்தில் ஷர்ஜீல் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

துப்பாக்கிச்சூடு: காதை உரசிச்சென்ற குண்டு.. என்ன நடந்தது?.. டொனால்ட் டிரம்ப் விளக்கம்!

''சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்''

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் அனுமதி.. அமெரிக்காவில் பரபரப்பு!

மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது?... நீட் முறைகேடுகளுக்கு மத்தியில் அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இருந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.